செய்திகள்
ஒரே நாளில் 30,000 பேர் சோதனை - 578 சந்தேக நபர்கள் கைது

Jan 20, 2026 - 06:03 PM -

0

ஒரே நாளில் 30,000 பேர் சோதனை - 578 சந்தேக நபர்கள் கைது

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஊடாக நாடு முழுவதும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாளாந்த சோதனைகளின் போது, நேற்று (19) 578 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

நேற்று ஒரு நாளில் மாத்திரம் 29,504 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதன்போது இந்த அளவிலான சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 282 திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

 

மேலும், இந்தச் சோதனையின் போது திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மேலும் 177 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அத்துடன், இச்சோதனையின் போது குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 427 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 6 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தவிர, ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,384 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05