Jan 20, 2026 - 06:30 PM -
0
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
கடந்த 09 ஆம் திகதி தெஹிவளையில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கியின் புகைப்படத்தை AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொலிஸார் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
விசாரணைகளின் போது சாட்சிகள் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக குறித்த AI புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் கடந்த 09 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கல்கிசைப் பிரிவு குற்ற விசாரணைப் பணியகத்தினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புகைப்படத்தில் காணப்படும் சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நிலையப் பொறுப்பதிகாரி, கல்கிசைப் பிரிவு குற்ற விசாரணைப் பணியகம் - 071-8596408

