Jan 23, 2026 - 03:59 PM -
0
திடீர் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தும் நோக்கில் ஜப்பானிய பாராளுமன்றத்தைக் கலைக்க அந்நாட்டுப் பிரதமர் சனே டக்காய்ச்சி (Sanae Takaichi) நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி ஜப்பானிய பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜப்பானின் முதலாவது பெண் பிரதமராக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் பதவியேற்ற சனே டக்காய்ச்சி, பதவிக்கு வந்து 3 மாதங்கள் போன்ற குறுகிய காலப்பகுதிக்குள் இவ்வாறு பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளமை விசேட அம்சமாகும்.
அவரது பிரபலத்தின் ஊடாக ஆளும் கட்சியின் அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்தும் எதிர்பார்ப்புடன் இந்தத் திடீர் தேர்தல் அழைக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

