Jan 23, 2026 - 05:23 PM -
0
இளையோர் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கையுடன் இன்று (23) நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களால் இலகுவான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணியின் அழைப்பை ஏற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் சாமிக ஹீனடிகல 14 ஓட்டங்களையும், கவிஜ கமகே 10 ஓட்டங்களையும் பெற்றனர்.
வேறு எந்த வீரராலும் குறிப்பிடத்தக்க ஓட்டங்களைப் பெற முடியவில்லை.
பந்துவீச்சில் வில் பைரம் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து, வெற்றிக்குத் தேவையான 59 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றியீட்டியது.

