செய்திகள்
கேகாலை - அவிசாவளை வீதியில் கோர விபத்து - ஒருவர் பலி

Jan 23, 2026 - 06:31 PM -

0

கேகாலை - அவிசாவளை வீதியில் கோர விபத்து - ஒருவர் பலி

கேகாலை - அவிசாவளை வீதியின் மத்தமகொட, பலோவிட்ட பிரதேசத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 

கேகாலை திசையிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், அவிசாவளை திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. 

இதன்போது இருவர் படுகாயமடைந்து கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். 

கொட்டியாகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மரணித்தார். 

அவர் வெளிநாடு செல்வதற்குத் தேவையான ஆவணங்களைத் தயார் செய்வதற்காகச் சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05