Jan 23, 2026 - 08:25 PM -
0
தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் போதைப்பொருட்கள் நிரப்பப்பட்ட இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகளிலும் சுமார் 270 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் உள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேகத்திற்குரிய குறித்த இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகளும் தற்போது கரைக்குக் கொண்டுவரப்பட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

