Jan 23, 2026 - 09:12 PM -
0
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகள் மீதான இந்த ஆண்டிற்கான விசாரணைகள் கிளிநொச்சியில் இன்று (23) ஆரம்பமாகின.
நேற்றைய தினம் (22) வவுனியாவில் விசாரணை அதிகாரிகளுக்கான விசேட செயலமர்வு நீதியமைச்சர் தலைமையில் நடைபெற்றதைத் தொடர்ந்து, இன்று கிளிநொச்சியில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் கிளிநொச்சி பிராந்திய காரியாலயத்திற்கு கிடைக்கப்பெற்ற 112 முறைப்பாடுகள் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர், சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த தலைமையில் மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
--

