Jan 23, 2026 - 10:01 PM -
0
தனியார் துறை மற்றும் அரச சார்பு நிறுவனங்களுக்கு (Semi-government) ஓய்வூதியம் ஒன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
"EPF மற்றும் ETF ஆகிய இரண்டு நிதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை நான் மிகத் தெளிவாகக் கூறினேன். நாங்கள் EPF நிதியை ஓய்வூதியமாக மாற்றப்போவதாக நான் கூறவில்லை. நான் கூறிய விடயம் தவறாகப் போய்ச் சேர்ந்துள்ளது.
இந்த EPF நிதியானது சமூகப் பாதுகாப்புக்காகவே உள்ளது. தனியார் துறை மற்றும் அரச சார்பு நிறுவனங்களுக்கு ஓய்வூதியம் ஒன்றை வழங்குவது குறித்தே நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். மாறாக, EPF நிதியை ஓய்வூதியமாக மாற்றப்போவதாக நான் கூறவில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.

