செய்திகள்
800 கிலோ சுறா மீன்களுடன் 7 நபர்கள் கைது!

Jan 24, 2026 - 05:06 PM -

0

800 கிலோ சுறா மீன்களுடன் 7 நபர்கள் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 நபர்களை, வென்னப்புவ பகுதியில் வைத்து கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

வென்னப்புவ, வெல்லமன்கர மீன்பிடித் துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 876 கிலோ 200 கிராம் நிறையுடைய சுறா மீன் தொகுதி, பலநாள் மீன்பிடிப் படகொன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட 7 சந்தேகநபர்களும், மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக வென்னப்புவ மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05