வடக்கு
கிளிநொச்சியில் 2 மோட்டார் குண்டுகள் மீட்பு

Jan 24, 2026 - 05:18 PM -

0

கிளிநொச்சியில் 2 மோட்டார் குண்டுகள் மீட்பு

கிளிநொச்சி - பரந்தன், உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் இரண்டு மோட்டார் குண்டுகள் நேற்று (23) கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 

விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் அருகே, இரண்டு 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் இருப்பதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். 

பின்னர் அவர்கள் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் குறித்த இடத்தின் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன் இரு குண்டுகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05