செய்திகள்
இலங்கை நிர்ணயித்த வெற்றியிலக்கு

Jan 24, 2026 - 05:51 PM -

0

இலங்கை நிர்ணயித்த வெற்றியிலக்கு

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (23) கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெறுகின்றது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் சரித் அசலங்க 45 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். 

அதற்கமைய 220 என்ற வெற்றியிலக்கை நோக்கி இங்கிலாந்து அணி துடுப்பாடவுள்ளது. 

இரண்டு அணிகளுக்கும் இடையில் ஏற்கனவே இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05