Jan 28, 2026 - 06:34 PM -
0
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக, தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை குழாம் இன்று (28) அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் இந்தத் தொடருக்காக 16 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டிகள் ஜனவரி 30 மற்றும் பெப்ரவரி 1, 3 ஆகிய திகதிகளில் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை குழாமில் பின்வரும் வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பெதும் நிஸ்ஸங்க
கமில் மிஷார
குசல் மெண்டிஸ்
குசல் ஜனித் பெரேரா
தனஞ்சய டி சில்வா
சரித் அசலங்க
ஜனித் லியனகே
பவன் ரத்நாயக்க
வனிந்து ஹசரங்க
துனித் வெல்லாலகே
மகேஷ் தீக்ஷன
துஷ்மந்த சமீர
பிரமோத் மதுஷான்
மதீஷ பத்திரண
ஏஷான் மாலிங்க

