Jan 29, 2026 - 06:50 PM -
0
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியானது, இன்று பதவியாசைக்கும் கதிரைப் போட்டிக்குமான ஒரு கட்சியாக மாறியுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடியில் இன்று (29) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இலங்கை தமிழரசுக்கட்சி இன்று பலவாறாகச் சிதைந்து போயுள்ளது. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதை அக் கட்சி முழுமையாக மறந்துவிட்டது.
மாறாக, தங்களுக்குள் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும், தனிப்பட்ட வெற்றிகளை ஈட்டிக்கொள்வதற்குமான முயற்சிகளையே அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்" என அவர் சாடினார்.
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்காக ஒன்றிணைந்து செயற்படுவதைக் காட்டிலும், உள்வீட்டு அதிகாரப் போட்டிகளுக்கே அக் கட்சி முன்னுரிமை அளித்து வருவதாக அவர் தனது கருத்தில் மேலும் வலியுறுத்தினார்.

