Jan 30, 2026 - 10:15 AM -
0
ஆயுள் காப்புறுதி சந்தையின் முன்னணி நிறுவனமாக திகழும் செலிங்கோ லைஃப் ஆனது, அம்பலாந்தோட்டையில் புதியதாக நோக்கத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த கிளை அலுவலகத்தை திறந்து வைத்ததன் மூலம், இலங்கையின் தென் பகுதியில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், அந்தப் பகுதியில் தனது நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டிடத்தில் செயல்படும் முதலாவது ஆயுள் காப்புறுதி நிறுவனம் என்ற பெருமையையும் செலிங்கோ லைஃப் பெற்றுள்ளது.
அம்பலாந்தோட்டை, தங்கல்லை வீதி, இல. 207G என்ற முகவரியில் அமைந்துள்ள இந்த இரண்டு மாடிக் கட்டிடம், செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் 35-வது சொந்தக் கட்டிடக் கிளை அலுவலகமாகும். வாடிக்கையாளர் வசதியை முதன்மைப்படுத்தியும், சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையிலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த புதிய கிளையானது, நிலைத்த உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கான செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் நீண்டகால அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நவீன கிளையானது மொத்தமாக 3,200 சதுர அடி பரப்பளவு கொண்டதாகவும், 10 வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் அமைந்ததாகவும் 11 மாத காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடமானது, தேசிய பொறியியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையம் அறிமுகப்படுத்திய Precast Concrete தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாரம்பரிய கட்டுமான முறைகளுடன் ஒப்பிடுகையில் 10 முதல் 15 சதவீதம் வரை செலவு சேமிப்பு, 20 சதவீதம் கட்டுமான நேரக் குறைவு, உயர் வெப்ப வசதி மற்றும் நீண்டகால பராமரிப்பு செலவுகள் குறைவு போன்ற முக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் பசுமை கட்டிடக் கருத்துடன் இணங்க வடிவமைக்கப்பட்ட இந்த அம்பலாந்தோட்டை கிளை, 15 kW திறன் கொண்ட off-grid சோலார் மின்சார அமைப்புடன் செயல்படுகிறது. இதனால் மின்சார கட்டணம் முற்றிலும் பூஜ்ஜியமாக இருப்பதுடன், டீசல் ஜெனரேட்டரின் தேவையும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கட்டிடத்தில் மழைநீர் சேகரிப்பு முறைமையும், கழிவுநீர் மீள்சுழற்சி முறைமையும் இணைக்கப்பட்டுள்ளன. இவை மூலம், கழிப்பறை பயன்பாடு மற்றும் தோட்ட பராமரிப்பிற்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கப்படுவதுடன், குழாய் வழி நீர் பயன்பாடு மிகக் குறைந்த அளவில் பராமரிக்கப்படுகிறது.
மின்சக்தி சேமிப்பு கொண்ட குளிரூட்டல் மற்றும் மின்குமிழ் முறைமைகளைப் பயன்படுத்துதல், இயற்கை ஒளியின் அதிகபட்ச பயன்பாடு, இயற்கை காற்றோட்டம், மற்றும் கட்டுமானத்தில் மரப் பயன்பாட்டை மிகக் குறைந்த அளவில் வைத்திருத்தல் ஆகியவற்றின் மூலம்சக்தி திறன் மேலும் மேம்படுத்தப்படுகிறது. வளாகத்தில் ஏற்கனவே இருந்த மரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன, மேலும் கட்டிடத்தைச் சுற்றியுள்ள இயற்கை சூழலை மேம்படுத்தும் வகையில் மேலதிக மரநடுகைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் அம்சங்களைத் தாண்டி, இந்த புதிய அம்பலாந்தோட்டை கிளையானது, வரவேற்பும், வசதியும், நிலைத்த தன்மையும் கொண்ட சூழலில் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் வகையில், நிறுவனத்திற்குச் சொந்தமான, நோக்கத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட வளாகங்களில் முதலீடு செய்வது என்ற செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் மூலோபாயத்தை வலியுறுத்துகிறது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள முக்கிய பிராந்திய நிலையங்களில் காப்புறுதி நிறுவனத்தின் இருப்பும் மேலும் வலுப்பெறுகிறது.
செலிங்கோ லைஃப் நிறுவனம், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தொடர்ந்து 21 ஆண்டுகளாக சந்தை முன்னணியில் இருந்து வருகிறது. காப்புறுதி பெற்றவர்களின் இலக்குகள் மற்றும் கனவுகளை பாதுகாக்கவும், அபாயங்களை குறைக்கவும் உதவும் புத்தாக்கமான காப்புறுதித் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டில், Brand Financeஅமைப்பின் மதிப்பீட்டின்படி, செலிங்கோ லைஃப் நிறுவனம் இலங்கையின் மிக உயர்ந்த மதிப்புள்ள காப்புறுதி வர்த்தகநாமமாகவும், 22-வது மிக பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டது. அதே ஆண்டில், தொடர்ந்து 19-வது தடவையாக ஆண்டின் மக்களுக்கான ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் (People’s Life Insurance Service Provider of the Year) விருதைப் பெற்றதன் மூலம், மில்லியன் கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரியவர்த்தகநாமம் என்ற தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியது.மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கையின் ஆண்டுக்கான வர்த்தகநாமம் என்ற விருதினை பெற்றுள்ள இந்த நிறுவனம், இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) மற்றும் முகாமைத்துவ கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனம் (CIMA) ஆகிய அமைப்புகளால் இலங்கையின் மிகவும் பாராட்டப்பட்ட 10 நிறுவனங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

