Jan 30, 2026 - 11:13 AM -
0
சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட கரவிடாகரிய பகுதியில் ஒருதொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், கடந்த 28 ஆம் திகதி குறித்த பகுதியில் விஷேட சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை சோதனை செய்த பொலிஸார், அவரிடமிருந்து 70 கிராம் 180 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் என்பனவற்றுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம், கரவிடாகரிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
--

