Jan 30, 2026 - 04:47 PM -
0
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பதற்கான ஒப்பந்தத்தில் பெருந்தோட்ட அமைச்சு பிராந்திய தோட்ட நிறுவனங்களுடன் கையெழுத்திட்டுள்ளது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஜனாதிபதிக்கு நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர் தொழிலாளர்கள்.
2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, ஜனாதிபதியினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1,750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
--

