இந்தியா
அரசியல்தான் எனது எதிர்காலம்! அது நீண்ட கால பயணம்- விஜய் திட்டவட்டம்

Jan 31, 2026 - 08:36 AM -

0

அரசியல்தான் எனது எதிர்காலம்! அது நீண்ட கால பயணம்- விஜய் திட்டவட்டம்

என்.டி.டிவி நடத்திய தமிழ்நாடு உச்சி மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

33 ஆண்டு கால சினிமா வாழ்வை விட்டு விலகுவது எளிதான முடிவு அல்ல.கொரோனா காலத்திற்கு பின்னர் அரசியலுக்கு வருவது பற்றி தீவிரமாக ஆலோசித்தேன்.அரசியலுக்கு வரும் முடிவு திடீரென எடுத்த முடிவு அல்ல.அரசியல்தான் எனது எதிர்காலம். எனது அரசியல் பயணம் நீண்ட கால பயணம். வரவிருக்கும் தேர்தலில் வெல்லவே அரசியல் களத்திற்கு வந்துள்ளேன். கரூர் சம்பவம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தற்போது வரை என்னை துரத்தி கொண்டிருக்கிறது. நடந்ததை முழுமையாக புரிந்து கொள்ளவும், அதை ஜீரணிக்கவும் எனக்கு நேரம் தேவைப்பட்டது. எல்லாவற்றிற்கும் நான் உடனடியாக எதிர்விணை ஆற்றுவதில்லை. நான் என்ன அனுபவித்தேன் என்பதை புரிந்து கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05