Jan 31, 2026 - 02:31 PM -
0
இந்தியாவின் ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சித்தேஷ் லாட் புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி சதம் அடித்த அவர், ஒரே ரஞ்சி தொடரில் ஐந்து சதங்கள் அடித்த மும்பை வீரர்கள் என்ற பெருமைமிக்க பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்துள்ளார். மும்பை அணியின் மூன்றாவது வீரர் ரஞ்சி கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 90 ஆண்டுகளில், ஒரு குறிப்பிட்ட தொடரில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்த வீரர்கள் மிகவும் குறைவு.
இதுவரை 26 வீரர்கள் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். மும்பை அணியைப் பொறுத்தவரை, 1944 - 1945 ஆம் ஆண்டில் ரூசி மோடி இந்தச் சாதனையை முதன்முதலில் நிகழ்த்தினார். அதன் பிறகு 1994 - 1995 ஆம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் ஒரே தொடரில் 5 சதங்கள் விளாசினார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சித்தேஷ் லாட் அந்தப் பட்டியலில் மூன்றாவது வீரராக இணைந்து மும்பை கிரிக்கெட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த டெல்லி அணி 221 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய மும்பை அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய சித்தேஷ் லாட் பொறுப்புடன் விளையாடி அவர், 178 பந்துகளைச் சந்தித்த அவர் 12 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இது இந்த ரஞ்சித் தொடரில் அவர் அடிக்கும் நான்காவது தொடர்ச்சியான சதமாகும். இவருக்குத் துணையாக சுவேத் பார்கர் 53 ஓட்டங்களை சேர்த்தார். இந்த ஜோடி 6 ஆவது விக்கெட்டிற்கு 130 ஓட்டங்களை குவித்தது. ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 266 ஓட்டங்கள் எடுத்து, டெல்லியை விட 45 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

