விளையாட்டு
சஞ்சு சாம்சனுக்கு கட் அவுட் வைத்த ரசிகர்கள்

Jan 31, 2026 - 04:37 PM -

0

சஞ்சு சாம்சனுக்கு கட் அவுட் வைத்த ரசிகர்கள்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3 இல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 

இந்நிலையில் 5 ஆவது மற்றும் கடைசி போட்டி இன்று (31) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதன்மூலம் சஞ்சு சாம்சன் தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடுகிறார். 

டி20 உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி டி20 போட்டி இதுவாகும். இதனால் கடந்த 4 டி20 போட்டிகளில் போதிய ஓட்டங்களை குவிக்காத சாம்சன் சொந்த ஊரில் பார்முக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். 

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் போட்டி நடைபெறுவதால் மைதானத்தில் சஞ்சு சாம்சனுக்கு அவரது ரசிகர்கள். பிரமாண்ட கட் அவுட் வைத்துள்ளனர்.

Comments
0

MOST READ