Feb 8, 2026 - 10:24 AM -
0
2026 ஐசிசி ஆடவர் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆரம்பச் சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் தனது முதலாவது போட்டி இன்று (08) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியை எதிர்கொள்கின்றது.
போட்டி இன்று இரவு 7:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், இப்போட்டிக்காகத் தயாராகும் வகையில் இலங்கை வீரர்கள் தமது இறுதிக்கட்டப் பயிற்சிப் போட்டிகளை நேற்று (07) ஆர். பிரேமதாச மைதானத்தில் மேற்கொண்டனர்.

