Feb 11, 2026 - 10:06 AM -
0
தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் பதவி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எந்த கலந்தாலோசனையும் செய்யாமல் அரசியல்குழு பாராளுமன்ற குழு தலைவரை தெரிவுசெய்து தங்களிடம் செய்தியாக தெரிவித்ததாக தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
எட்டுப்பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்தே பாராளுமன்ற குழு தலைவரை தெரிவுசெய்ததாகவும், ஆனால் தற்போது அதனை அரசியல்குழு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வெல்லாவெளியில் நேற்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படுவது தொடர்பில் கேட்டபோது தற்போது கட்சி நீதிமன்றில் உள்ளதன் காரணமாக நீதிமன்ற வழங்குகள் முடிவுறுத்தப்பட்டதன் பின்னரே பொதுக்குழு கூட்டம் நடாத்தமுடியும் என அவர் தெரிவித்தார்.
--

