கிழக்கு
சட்ட விரோத குடியேற்றங்கள் எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்படாது!

Feb 11, 2026 - 10:47 AM -

0

சட்ட விரோத குடியேற்றங்கள் எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்படாது!

வடக்கு மக்கள் மீது நம்பிக்கையினையும் நல்ல பாசத்தினையும் ஜனாதிபதி கொண்டுள்ளதன் காரணமாக பெருமளவான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். 

வெல்லாவெளியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த ஆட்சிக்காலத்தில் இனப்பரம்பலை மாற்றும் சட்ட விரோத குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் எமது ஆட்சிக்காலத்தில் அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாது என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05