செய்திகள்
அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை வழக்கு: இன்று வெளியாகிறது தீர்ப்பு!

Feb 11, 2026 - 11:54 AM -

0

 அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை வழக்கு: இன்று வெளியாகிறது தீர்ப்பு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக, பிரதிவாதிகள் இன்று (11) கம்பஹா நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளின் போது, நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் உயிரிழந்தனர். 

இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் 42 பிரதிவாதிகளுக்கு எதிராகக் கம்பஹா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

குறித்த வழக்கு கடந்த ஜனவரி 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதன் தீர்ப்பு இன்றைய தினத்திற்கு (11) ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதற்கமையவே இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05