வணிகம்
SLT-MOBITEL நாடளாவிய ரீதியில் eSIM சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் MegaPay (Pay & Go) உடன் கைகோர்ப்பு

Feb 11, 2026 - 12:18 PM -

0

SLT-MOBITEL நாடளாவிய ரீதியில் eSIM சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் MegaPay (Pay & Go) உடன் கைகோர்ப்பு

இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை மேம்படுத்தும் மூலோபாய நகர்வாக, SLT-MOBITEL தனது நாடளாவிய பெறுமதி ஒதுக்கத்தை மேம்படுத்தி, இலங்கையர்களை டிஜிட்டல் உலகுடன் இணைத்து eSIM சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு வழிகோலும் வகையில், MegaPay (Pay & Go) உடன் பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தக் கூட்டு முயற்சியானது, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள இலங்கையர்கள், நாடு முழுவதும் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட Pay & Go kiosksகுகள், Pay & Go App மற்றும் ஒன்லைன் சேவைகள் ஊடாக மொபிடெலின் அடுத்த தலைமுறைக்கான eSIM இணைப்பை உடனடியாகப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கிறது. 

இந்தப் பங்காண்மையானது, தடையற்ற டிஜிட்டல் அனுபவங்களை வழங்குவதற்கும், டிஜிட்டல் அணுகலை எளிமைப்படுத்துவதற்கும் மற்றும் வாடிக்கையாளர் சென்றடைவை விரிவுபடுத்துவதற்குமான SLT-MOBITEL-இன் இலட்சியத்தை மேலும் வலுப்படுத்துகிறது. Pay & Go கட்டமைப்பின் விரிவான வலையமைப்பு மற்றும் 24/7 தடையற்ற அணுகல் வசதி ஆகியவற்றின் மூலம், இலங்கை மொபைல் வாடிக்கையாளர்கள் உடனடியாக மொபிடெல் eSIM சேவையில் இணைந்து கொள்வதுடன், பிரத்தியேக சலுகைகளையும் எந்நேரத்திலும், எவ்விடத்திலிருந்தும் அனுபவிக்க முடியும். 

இந்தப் பங்காண்மையினூடாக நாடு முழுவதிலும் டிஜிட்டல் மாற்றியமைப்புச் செயற்பாடுகளை துரிதகதியில் முன்னெடுக்கும் SLT-MOBITEL இன் செயற்பாடுகள் பிரதிபலிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், சிரேஷ்ட MegaPay பிரதிநிதிகள் பிரசன்னமாகியிருந்தனர். அதில், பொதுப் பணிப்பாளர் வர்தன் அஸ்லிபெக்யன், செயற்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு தலைமை அதிகாரி கயான் சந்திரரத்ன மற்றும் வணிக அபிவிருத்தி தலைமை அதிகாரி டென்வர் பெர்னான்டோ ஆகியோர் அடங்கியிருந்தனர். மொபிடெல் சார்பாக அதன் பிரதம செயற்பாட்டு அதிகாரி சுதர்ஷன கீகனகே, புதிய சந்தை அபிவிருத்தி பொது முகாமையாளர் ருக்ஷான் டி சில்வா, புதிய சந்தை அபிவிருத்தி உதவி முகாமையாளர் மெலான் விஜேசேகர ஆரச்சிகே ஆகியோர் அடங்கியிருந்தனர். 

இந்தக் பங்காண்மையின் மூலம், Pay&Go சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களின் பயன்பாட்டுக்கான கட்டணங்களை செலுத்துவதுடன், ஏனைய சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் அமைந்துள்ள 1,000-க்கும் மேற்பட்ட Pay & Go kiosksகளில் உள்ள QR குறியீடுகளை ஸ்கான் செய்வதன் மூலமும், மாதந்தோறும் 600,000-க்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட Pay & Go மொபைல் app மற்றும் இணையதளம் வாயிலாகவும் மொபிடெல் eSIM இணைப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இச்சேவையானது வருடம் முழுவதும் 24 மணிநேரமும் கிடைப்பதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயனர்களுக்குத் தடையற்ற இணைப்பை உறுதி செய்கிறது. 

இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தின் முக்கிய வடிவமைப்பாளர்களில் ஒன்றாக விளங்கும் SLT- MOBITEL, தொழில்நுட்பத்திற்கும் அன்றாட வாழ்விற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் நோக்கில், மூலோபாயக் கூட்டாண்மைகள் மூலம் தனது எல்லையைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. இலங்கையில் eSIM சந்தை வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நிலையில், இந்த அறிமுகமானது எதிர்காலத்திற்குத் தேவையான மொபைல் அனுபவங்களை வழங்குவதில் SLT-MOBITEL நிறுவனத்தை ஒரு முன்னோடியாக முன்னிலைப்படுத்துகிறது. 

2015 ஆம் ஆண்டு முதல், கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் ரீலோட் சேவைகளை வழங்குவதற்காக இரு நிறுவனங்களும் வெற்றிகரமாக கைகோர்த்து செயலாற்றுகின்றன. இந்தக் பங்காண்மையின் புதிய கட்டமானது, ஏற்கனவே உள்ள வலுவான அடித்தளத்தை மேம்படுத்தி, அதிக மதிப்பையும் விரிவான அணுகலையும் வழங்குகிறது. MegaPay நிறுவனத்தின் 1,000-க்கும் மேற்பட்ட Kiosks மற்றும் இணையம், மொபைல் மற்றும் கியோஸ்க் தளங்கள் வழியாக மாதந்தோறும் பயன்படுத்தும் 600,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட விரிவான வலையமைப்பின் மூலம், மொபிடெல் eSIM சேவையை மிகவும் எளிதாகவும் வசதியாகவும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இந்த நிகரற்ற அணுகல் வசதியானது, டிஜிட்டல் தளங்களில் ஈடுபாடுள்ள நுகர்வோரை நேரடியாக சென்றடைவதற்கான தெளிவான பாதையை SLT-MOBITEL நிறுவனத்திற்கு வழங்குகிறது. 

மேலதிக தகவல்களுக்கு அருகிலுள்ள Pay & Go kiosk இற்கு விஜயம் செய்யுங்கள், Pay & Go app ஐ டவுன்லோட் செய்யுங்கள் அல்லது Pay & Go இணையத்தளத்தை www.paygo.lk இல் பார்வையிடுங்கள்.

Comments
0

MOST READ
01
02
03
04
05