Feb 14, 2026 - 11:46 AM -
0
பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் கடந்த 8ஆம் திகதி, 'ஐஸ்' போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டிருந்தது.
சந்தேகநபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்ட, பேலியகொட, தெமட்டகொட, தலங்கம, கொத்தட்டுவ, மருதானை, கறுவாத்தோட்டம், பொரளை மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 08 மோட்டார் சைக்கிள் கொள்ளைகள் மற்றும் லெப்டொப், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல சொத்துக் கொள்ளைகளை இவர் மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவரால் திருடப்பட்ட சில மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மடிக்கணினி உள்ளிட்ட சொத்துக்களை விசாரணை அதிகாரிகள் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இன்று (14) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

