செய்திகள்
தென்னாப்பிரிக்காவுக்கு நியூசிலாந்து நிர்ணயித்த வெற்றியிலக்கு

Feb 14, 2026 - 08:45 PM -

0

தென்னாப்பிரிக்காவுக்கு நியூசிலாந்து நிர்ணயித்த வெற்றியிலக்கு

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (14) இடம்பெறுகின்றது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

நியூசிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மார்க் சப்மேன் 48 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார். 

இதன்படி 176 என்ற வெற்றியிலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி துடுப்பாடவுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05