Feb 14, 2026 - 10:08 PM -
0
நுவரெலியா சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (14) காலை முதல் தொடர்ந்து கடுமையான மழையுடன் பனிமூட்டம் நிலவி காணப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது.
நுவரெலியா , கந்தபளை , நானுஓயா, லிந்துலை போன்ற இடங்களில் கடுமையான மழையுடன் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகின்றன.
இதன் காரணமாக வாகனங்களை செலுத்தும் போது முன்பக்க விளக்குகளை ஒளிரவிட்டு வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில் நுவரெலியா - பதுளை பிரதான வீதி , நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதி மற்றும் நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் அதிகமாக வாகனப் போக்குவரத்து இடம்பெறுவதால் சாரதிகள் மிகவும் அவதாரத்துடன் செயல்பட வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
--

