Feb 22, 2026 - 01:33 PM -
0
சீன சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று ரஷ்யாவின் சைபீரியாவில் உறைந்த நிலையில் காணப்பட்ட பைக்கால் ஏரியில் மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார்.
ஏரியின் மேற்பரப்பில் உறைந்திருந்த தடிமனான பனிக்கட்டியின் மீது குறித்த பஸ் பயணித்துக் கொண்டிருந்த போது, பனிக்கட்டி திடீரென உடைந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விபத்து இடம்பெற்ற குறித்த ஏரிப் பகுதியின் ஆழம் சுமார் 60 அடி என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

