Feb 22, 2026 - 04:17 PM -
0
மஹாவலி கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அதன் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.
இதன்காரணமாக பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதி சிறிய அளவில் நீரில் மூழ்கியுள்ளது.
குறித்த வீதியின் கல்லெல்ல மற்றும் மனம்பிட்டி ஆகிய பகுதிகளுக்கு இடையில் இரண்டு இடங்களில் இவ்வாறு வீதி நீரில் மூழ்கியுள்ளதால், அவ்வீதியூடான வாகனப் போக்குவரத்திற்குச் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

