விளையாட்டு
இந்திய அணிக்கு 188 வெற்றியிலக்கு

Feb 22, 2026 - 08:56 PM -

0

இந்திய அணிக்கு 188 வெற்றியிலக்கு

உலக கிண்ண இருபதுக்கு 20 போட்டியில் இன்றைய (22) இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. 

அஹமதாபாத்தில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

தென்னாப்பிரிக்க அணி சார்பில் துடுப்பாட்டத்தில் டேவிட் மில்லர் 63 ஓட்டங்களையும், டேவிட் பிராவிஸ் 45 ஓட்டங்களையும், திரிட்ஸ்டன் ஸ்டப்ஸ் 44 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர். 

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இந்நிலையில் இந்திய அணிக்கு 188 வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05