May 22, 2025 - 08:32 AM -
0
வரலாற்று சிறப்பு மிக்க யாழ். இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் தேவஸ்தான மூன்றாம் நாள் திருக்கைலாய வாகன திருவிழா நேற்று (21) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கடந்த 19 ஆம் திகதி அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவம் 29 ஆம் திகதி அன்று சப்பறத் திருவிழாவும், 30 ஆம் திகதி அன்று இரதோற்சவமும் 31 ஆம் திகதி அன்று தீர்த்தோற்சவமும் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவடையும்.
-யாழ். நிருபர் ரமணன்-