Dec 11, 2025 - 02:31 PM -
0
மகாகவி பாரதியாரின் 143 வது பிறந்தாள் நிகழ்வு இன்று (11) வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள பாரதியார் சிலையடியில் நடைபெற்றது.
இதன்போது மகாகவி பாரதியாரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தப்பட்டது.
சுப்பிரமணியன் 1882 டிசம்பர் 11 இல், சென்னை மாகாணத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் (தூத்துக்குடியில்) பிறந்தார்.
பெண் விடுதலை, சாதிய எதிர்ப்பு, சமத்துவம் என்பவற்றை வலியுறுத்தி இவர் கடுமையாக போராடினார்.
இவர் வழக்கமாக உணவளிக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலின் லாவண்யா என்ற யானை, ஒரு நாள் இவர் தேங்காய் வழங்கியபோது, இவரைத் தாக்கியது.
இந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்த போதிலும், இதன் விளைவாக சில மாதங்களில் இவரது உடல்நிலை மோசமடைந்தது. 1921 செப்டம்பர் 11 அன்று அதிகாலை 1 மணி அளவில், பாரதியார் இயற்கை எய்தினார்.
-யாழ். நிருபர் கஜிந்தன்-

