Dec 25, 2025 - 05:17 PM -
0
அம்பாறை புனித இக்னேஷியஸ் தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடப்படும் நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை நடாத்தப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு விசேட ஆராதனை குறித்த தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நேற்று (24) இரவு 10.30 மணிக்கு தொடங்கியது.
இந்த வழிபாட்டை அம்பாறை தேவாலயத்தின் பாதிரியார் ரோஷன் திசேரா தலைமையில் இடம்பெற்றதுடன் திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
அம்பாறை நகரத்தைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவ பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
அம்பாறையில் உள்ள நவகம்புர கிராமத்தைச் சேர்ந்த இளம் குழந்தைகள் குழு ஒன்று இந்த ஆண்டு தேவாலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஒரு மாட்டு குகையை கட்டி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புதிய உயிர் கொடுத்ததை அவதானிக்க முடிந்தது.
அத்துடன் பாதிரியார் ரோஷன் திசேரா குழந்தைகளை தேவாலயத்திற்குள் அழைத்து வந்து சிறப்பு நன்றி தெரிவித்தார். இதன் போது விசேட பாதுகாப்பு நாடளாவிய ரீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
-அம்பாறை நிருபர் ஷிஹான்-

