Jan 17, 2026 - 04:58 PM -
0
விவசாய பொங்கல் விழா இன்று (17) காலை மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புச்சாக்கேணி 4 ஆம் கட்டை பகுதியில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் மாகாண தலைவர் கணபதிப்பிள்ளை இராசலிங்கம் தலைமையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாகரை பிரதேச சபை தவிசாளர் தெய்வேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் திட்ட வரைபு ஒன்றியத்தின் உத்தியோகத்தர் ரேணுக, பிரதேச சபை உறுப்பினர் சுவேந்திரன், திட்ட வரைபு ஒன்றியத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் அரவிந்தன், ஊவா மாகாண திட்ட வரைபு ஒன்றியத்தின் இணைப்பாளர், கிழக்கு திட்ட வரைபு ஒன்றியத்தின் உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று வரவேற்பு நடனம் மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் தொடர்பான சிறப்பு உரைகள் இடம்பெற்று அதிதிகள் உரையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முக்கிய அம்சமாக இயற்கு விவசாயத்தினை முன்னிறுத்தும் முகமாக விவசாய உற்பத்தி பொருட்களை கொண்டு அலங்கரிப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

