Jan 31, 2026 - 05:03 PM -
0
முல்லைத்தீவு ஊடக அமையத்தினால் கருப்பு ஜனவரி தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக ஊடகவியலாளர்களுக்கான அஞ்சலி நிகழ்வும் கறுப்பு ஜனவரி தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்வு இன்று (31) இடம் பெற்றிருந்தது.
ஊடகவியலாளர்களைப் பொறுத்தளவில் ஜனவரி மாதத்தை கருப்பு ஜனவரியாக அனுஷ்டித்து வருகின்றார்கள்.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலே ஊடகவியலாளர்களுக்கான நினைவு நிகழ்வும் கறுப்பு ஜனவரி துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்வும் முல்லைத்தீவு ஊடக அமையத்தினால் இன்று (31) முன்னெடுக்கப்பட்டது.
ஊடகவியலாளர்களுக்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

