Feb 22, 2026 - 07:11 PM -
0
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இன்று (22) இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் இதில் கலந்து கொண்டார்.
-கிளிநொச்சி நிருபர் சப்தன்-

