Nov 10, 2024 - 09:14 PM -
0
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
தம்புள்ளையில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அதிகபட்சமாக Will Young 30 ஓட்டங்களையும், Josh Clarkson 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Wanindu Hasaranga 04 விக்கெட்டுக்களையும் Matheesha Pathirana 03 விக்கெட்டுக்களையும், Nuwan Thushara 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதன்படி இலங்கை அணிக்கு 109 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
