Jan 5, 2025 - 10:57 AM -
0
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 8mm கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் சீனிகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 55 தோட்டாக்கள், 2 கைக்குண்டுகள் மற்றும் T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 66 தோட்டாக்கள் என்பனவும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

