வணிகம்
SLSRFR விருதுகளில் NDB வங்கி உத்தியோகபூர்வ வங்கிப் பங்குதாரராகஅங்கீகாரம்

Feb 6, 2025 - 01:51 PM -

0

SLSRFR விருதுகளில் NDB வங்கி உத்தியோகபூர்வ வங்கிப் பங்குதாரராகஅங்கீகாரம்

மஹரகம, அரியானா ரீச்சில் அண்மையில் நடைபெற்ற இலங்கை ரக்பி உதைப்பந்தாட்ட நடுவர்கள் சங்கத்தின் (SLSRFR) விருதுகள் மற்றும் தோழமை நிகழ்வில் NDB வங்கியானது உத்தியோகபூர்வ வங்கிப் பங்குதாரராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது . இந்த நிகழ்வானது ரக்பி நடுவர்களின் சிறப்பைக் கொண்டாடிய நிலையில் விளையாட்டு நிகழ்வுகளுக்கான SLSRFR இன் விலைமதிப்பற்ற பங்களிப்பை எடுத்துக்காட்டுவதாயும் அமைந்திருந்தது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக, NDB வங்கியானது SLSRFR உடன் அதன் உத்தியோகபூர்வ வங்கி பங்குதாரராக பெருமையுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இலங்கையில் இளைஞர் வலுவூட்டல் மற்றும் விளையாட்டுத்துறையின் முன்னேற்றத்திற்கான வங்கியின் நீண்டகால அர்ப்பணிப்பை இந்த பங்குடைமையானது வெளிப்படுத்துகிறது . SLSRFR போன்றஅமைப்புகளை ஆதரிப்பதன் மூலம், NDBயானது அடி மட்டத்தில் இருந்து தேசிய மட்டம் வரை சிறந்து விளங்கும் விளையாட்டுகளை மேம்படுத்துவதில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. 

இந்த பங்குடைமை தொடர்பாக NDB தெரிவிக்கையில் அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை வளர்ப்பதற்கும், விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும் தனது அர்ப்பணிப்பை வலியுறுத்தியது. இது தொடர்பாக வங்கி மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகள் இலங்கையின் இளைஞர்களுக்கு வலுவூட்டுவதுடன் மற்றும் தேசத்தின் விளையாட்டு மரபு வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கான அதன் தொலைநோக்கு பார்வையுடன் இணைந்துள்ளது. 

அப்போதைய இலங்கை ரக்பி உதைப்பந்தாட்ட சங்கத்தின்(தற்போதைய இலங்கை ரக்பி சங்கம்] அங்கீகாரத்துடன் 1953 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட SLSRFR சங்கமானது நாடு முழுவதும் ரக்பி போட்டிகளின் ஒருமைப்பாட்டினை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1931 ஆம் ஆண்டு இரத்தினபுரியில் நடைபெற்ற முதல் செவன்ஸ் போட்டிக்கு முந்தைய செழுமையான வரலாற்றைக் கொண்ட நிலையில் சங்கமானது களத்தில் கழக மற்றும் பாடசாலை ரக்பி போட்டிகளை மேற்பார்வையிட்டு நியாயமான ஆட்டத்தையும் தொழில்சார் மனப்பான்மையையும் உறுதி செய்யும் 103 நடுவர்களை உள்ளடக்கிய நிலையில் திகழ்கிறது. 

NDB வங்கியானது SLSRFR உடன் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறது.இதன் மூலம் விளையாட்டிற்கு அதன் முக்கிய பங்களிப்பை அங்கீகரிப்பதுடன் மற்றும் இலங்கையில் ரக்பியை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது. இந்த பங்குடைமையானது , சமூகங்களின் மத்தியில் விளையாட்டு சிறப்பை ஊக்குவித்தல் மூலம் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வங்கியின் பரந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05