வணிகம்
ஐக்கிய நாடுகள் ஆதரவுடனான புதிய டிஜிட்டல் பரிமாண வளர்ச்சி முயற்சியை ஆரம்பித்து, குடிசார் பதிவு மற்றும் முக்கிய புள்ளிவிபரவியல் முறைமையை இலங்கை வலுப்படுத்துகின்றது

Feb 10, 2025 - 03:10 PM -

0

ஐக்கிய நாடுகள் ஆதரவுடனான புதிய டிஜிட்டல் பரிமாண வளர்ச்சி முயற்சியை ஆரம்பித்து, குடிசார் பதிவு மற்றும் முக்கிய புள்ளிவிபரவியல் முறைமையை இலங்கை வலுப்படுத்துகின்றது

நாட்டின் குடிசார் பதிவு மற்றும் முக்கிய புள்ளிவிபரவியல் முறைமையை (Civil Registration, Vital Statistics - CRVS) வலுப்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு முக்கியமான படியாக,நிலைபேண் அபிவிருத்தி இலக்குகளை விரைவுபடுத்துதற்கான உள்ளூர் நிர்வாக புள்ளி விபர சேகரிப்பு கட்டமைப்புக்கள்(‘Transforming Local Administrative Data Collection Systems for SDG Acceleration’)என்ற கூட்டு முயற்சியை இலங்கை அரசாங்கமும், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ளன. ‘One Registry’ (ஒற்றைப் பதிவகம்) என்று பெயரிடப்பட்டுள்ள இம்முயற்சி, இலங்கையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (United Nations Development Programme - UNDP) மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் (World Health Organization (WHO) ஆகியவற்றால் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இலங்கை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம், நிலைபேண் அபிவிருத்தி இலக்குகள் (SDG) நிதியத்தின் நிதியுதவியின் முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக நலிவுற்ற சமூகங்கள் அடங்கலாக, அனைத்து பிரஜைகளும் தரமான அரச சேவையை அணுகுவதற்கு சமமான வாய்ப்பினைக் கொண்டிருப்பதை உறுதி செய்து, அரவணைப்பு உள்ளடக்கம் கொண்ட டிஜிட்டல் பரிமாண மாற்றம் மற்றும் நிலைபேண் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் நோக்குடன், அரசாங்கத்தின் பரந்தளவிலான டிஜிட்டல் பரிமாண மாற்ற நிகழ்ச்சி நிரல் மற்றும் மூலோபாயத்துடன் ஒன்றியுள்ளது. 

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற இச்செயற்திட்ட அறிமுக நிகழ்வில், கௌரவ பிரதமர் கலாநிதி ,ஹரிணி அமரசூரிய; கௌரவ கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பொது நிர்வாகம், உள்ளுராட்சி சபைகள் மற்றும் உள்ளுராட்சி அரசாங்க அமைச்சர்; கௌரவ எரங்க வீரரட்ண, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்; டபிள்யூ.ஆர்.ஏ.என்.எஸ். விஜயசிங்க, பதிவாளர் நாயகம்; மார்க்-ஆன்ட்ரே ஃபிராஞ்ச், வதிவிட இணைப்பாளர், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள்; அசுசா குபோடா, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் வதிவிட பிரதிநிதி; வைத்தியர் ஷலாலா அகமதோவா, பொறுப்பதிகாரி, இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனம்; கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர், ஐ.நா பங்காளர்கள், அபிவிருத்தி முகவர் நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர். 

இலங்கை பிரதமர் கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்கள் இந்நிகழ்ச்சித் திட்டம் மாற்றக்கூடிய சாத்தியங்கள் குறித்து வலியுறுத்தி கருத்து தெரிவிக்கையில், “குடிசார் பதிவு மற்றும் முக்கிய புள்ளிவிபரவியல் முறைமையை (CRVS) வலுப்படுத்துவது பொது நிர்வாகத்தை மேம்படுத்தி, எமது டிஜிட்டல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதை நோக்கிய பரிமாண மாற்றத்திற்கான ஒரு முக்கிய படியாகும். வெளிப்படைத்தன்மை, அரவணைப்பு உள்ளடக்கம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை அங்கீகரித்து, முக்கியமான சேவைகளை இலங்கை மக்கள் அனைவரும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புவசதியை இம் முயற்சி உறுதி செய்யும்,” என்று குறிப்பிட்டார். 

இம் முயற்சி பிரதானமாக மூன்று முக்கிய தூண்கள் மீது கவனம் செலுத்துகின்றது: டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட சிவில் பதிவு நடைமுறைகள், முக்கிய அரச நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட செயல்பாட்டு இயக்கம் கொண்ட ஒரு பதிவகம் மற்றும் இக்கட்டமைப்பின் நன்மைகளை உச்சப்படுத்துவதற்காக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரித்தல் மற்றும் டிஜிட்டல் அறிவு ஆகியவை அந்த தூண்கள் ஆகும். இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (e-NIC) மற்றும் இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் அடையாளம் (Sri Lanka Unique Digital Identity - SLUDI) போன்ற செயற்திட்டங்கள் அடங்கிய, டிஜிட்டல் சார்ந்த தேசிய முயற்சிகளுக்கு இது பெரிதும் துணைப்போவதுடன், ஒருங்கிணைந்த மற்றும் டிஜிட்டல் ரீதியாக அரவணைப்பு உள்ளடக்கம் கொண்ட சமுதாயத்தை நோக்கிய நாட்டின் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்வதை மேம்படுத்தும். 

புதுமை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மீது ஐக்கிய நாடுகள் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலித்து கருத்து தெரிவித்த இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட இணைப்பாளர் திரு. மார்க்-ஆன்ட்ரே ஃபிராஞ்ச் அவர்கள், “இலங்கையின் டிஜிட்டல் பயணத்தில் மிகவும் முக்கியமானதொரு அங்கமாகக் காணப்படுகின்ற குடிசார் பதிவு மற்றும் முக்கிய புள்ளிவிபரவியல் முறைமை (CRVS) நிகழ்ச்சித் திட்டமானது அனைவருக்கும் சட்டப்பூர்வ அடையாளத்தை வழங்கி, புள்ளி விபரங்களால் முன்னெடுக்கப்படுகின்ற கொள்கை வகுப்பிற்கு, உயர் தர புள்ளிவிபரங்களை வழங்கும். பொருத்தமான கொள்கைகள் மற்றும் கூட்டாண்மைகளுடன், நிலையான அபிவிருத்தியை முன்னெடுத்து, மகத்தான அளவில் அரவணைப்பு உள்ளடக்கத்தை வளர்த்து, மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் முடியும். இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பானது அனைவரையும் உள்வாங்கி, மக்களை மையமாகக் கொண்ட கட்டமைப்பொன்றை கட்டியெழுப்பும் முயற்சியில் அரசாங்கத்துடன் கைகோர்ப்பதையிட்டு பெருமை கொள்கின்றது,” என்று குறிப்பிட்டார். 

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் பிரதானி (Chargé d Affaires a.i) லார்ஸ் பிரெடல் அவர்கள் இம்முயற்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், “தரமான அரச சேவைகளுக்கான சமத்துவமான வாய்ப்புக்களை வழங்குவதற்கு துணை போவதற்காக, நாட்டின் குடிசார் பதிவு மற்றும் முக்கியமான புள்ளிவிபரவியல் கட்டமைப்பினை நவீனமயமாக்குவதற்கு இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் நிதியத்தின் நிதியுதவியின் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கூட்டு நிகழ்ச்சித்திட்டத்தில் இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். கூட்டு நிலையான அபிவிருத்தி இலக்குகளின் (SDG) நிதியத்தின் டிஜிட்டல்மயமாக்க அங்கத்தின் உலகளாவிய பங்களிப்பாளர் என்ற ரீதியில், டிஜிட்டல்மயமாக்கத்திற்கான முதலீடுகளினூடாக, ஒன்றோடொன்று இணைந்த நிலைபேண் அபிவிருத்தி இலக்குகளின் முன்னேற்றத்திற்கு EU Global Gateway நிதி அனுசரணை நேரடியாகப் பங்களிக்கும்,” என்று குறிப்பிட்டார். 

‘One Registry- Everyone Counts! හැමෝම වැදගත්! “ஒற்றைப் பதிவகம்” -அனைவரும் முக்கியம்!’ என்ற செயற்திட்டம், இலங்கையில் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற கொள்கைவகுப்பு மற்றும் டிஜிட்டல் அரவணைப்பு உள்ளடக்கம் ஆகியவற்றுக்கான வலுவான அத்திவாரத்தை இட்டு, விரிவுபடுத்தப்படக்கூடிய மற்றும் நிலைபேற்றியல் கொண்ட மறுசீரமைப்புக்களுக்கான அடித்தளத்தை ஏற்படுத்தி, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடையப்பெறுவதில் இலங்கையின் அர்ப்பணிப்புக்கு உதவும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05