வணிகம்
கடல் பாதுகாப்பு முன்முயற்சிகளுக்காக Clean Ocean Force Lanka உடன் NDB பங்குடைமை

Feb 11, 2025 - 08:56 AM -

0

கடல் பாதுகாப்பு முன்முயற்சிகளுக்காக Clean Ocean Force Lanka உடன் NDB பங்குடைமை

NDB வங்கியானது கடல் மாசுபாட்டை தடுத்தல் மற்றும் நிலையான சுற்றுச்சூழல் முறைமையை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இரண்டு மாற்று திட்டங்களை மேற்கொள்ளும் முகமாகClean Ocean Force Lanka (COF) உடன் ஒரு அற்புதமான பங்காளித்துவத்தில் இணைந்துள்ளது, இந்த பங்குடைமை மூலம் NDB வங்கி COF உடன் இணைந்து நீருக்கடியில் மூழ்கி சுத்தம் செய்யும் முதல் உள்நாட்டு வங்கியாக தனது தடத்தை பதித்துள்ளது, இது சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான வங்கியின் உறுதிப்பாட்டில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

இந்த கூட்டாண்மையானது இரண்டு முக்கிய முயற்சிகளை உள்ளடக்கியது:

அவை நீர்கொழும்பு ஏரியினை சுத்தப்படுத்தும் திட்டம் மற்றும் நீருக்கடியில் சுத்தப்படுத்துதல் மற்றும் பாறைகள் பாதுகாப்பு திட்டம் என்பனவாகும். நீர்கொழும்பு ஏரி சுத்தப்படுத்தல் முயற்சியானது, பல்லுயிர் பெருக்கத்திற்கான முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பான ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள சதுப்புநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மாசுகளை அகற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது. தூய்மைப்படுத்தும் முயற்சிகளுக்கு மேலதிகமாக, விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் மூலம் நீண்டகால தாக்கத்தை உருவாக்கி, இந்த பலவீனமான சுற்றுச்சூழல் முறைமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி உள்நாட்டு சமூகத்திற்குக் கற்பித்தல் மற்றும் சமூகத்தினரை ஈடுபடுத்துவதும் இந்த திட்டத்தில் அடங்குகிறது.

நீருக்கடியில் மூழ்கி சுத்தம் செய்யும்திட்டமானது இலங்கை முழுவதும் உள்ள மூலோபாய இடங்களில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் கடல் படுக்கைகளில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் கடல் குப்பைகளை அகற்றுவதில் கவனத்தை செலுத்துவதன் மூலம் NDB இன் முயற்சிகளை அதிக ஆழத்திற்கு கொண்டு செல்கிறது. COF இன் நீருக்கடியில் தூய்மைப்படுத்தும் முயற்சிகளை ஆதரிப்பதன் மூலம், கடல் பல்லுயிர் மற்றும் கடலோரப் பாதுகாப்பிற்கு இன்றியமையாத பவளப்பாறைகளை மீட்டெடுப்பதில் NDBயானது தனது தீவிரமான பங்களிப்பினை வழங்குகிறது. இந்த முன்னோடி முயற்சியானது சுற்றுச்சூழல் பொறுப்பில் NDB இன் தலைமையை உறுதிப்படுத்துகிறது, ஏனெனில் இந்த முக்கியமான பொறுப்பை ஏற்கும் முதல் உள்நாட்டு வங்கி NDB ஆகும்.

இந்த பங்குடைமையானது கடல் மாசுபாட்டை பல நிலைகளில் கையாளும் ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் வங்கிக்கு ஒரு தளத்தை வழங்குகிறது. இந்த பங்குடைமை தொடர்பாக கைச்சாத்திடும் நிகழ்வில் உரையாற்றிய NDB குழுமத்தின் மனிதவளத் தலைவர் லசந்த தசநாயக்க, “பொறுப்பான பெருநிறுவன பிரஜை என்ற வகையில், கடல் மாசுபாடு போன்ற அவசர சுற்றாடல் சவால்களை எதிர்கொள்வதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். COF உடனான இந்த கூட்டுறவின் மூலம், இலங்கையின் கடல்சார் சுற்றுச்சூழல் முறைமைகளில் நீடித்த தாக்கத்தை உருவாக்குவதையும், மற்றவர்களை இந்த நோக்கத்தில் இணைவதற்கு ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

இந்த பங்குடைமையானது NDB இன் நிலையான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான நோக்கத்தின் பிரதிபலிப்பாகும், அதே நேரத்தில் நிலைத்தன்மை சார்ந்த முன்முயற்சிகளில் ஒரு தலைவராக அதன் பங்கை மேம்படுத்துகிறது. கடற்கரை, ஏரி மற்றும் நீருக்கடியில் சுற்றுச்சூழல் முறைமைகளை உள்ளடக்கிய கடல் பாதுகாப்பு முயற்சிகளை விரிவுபடுத்துவதன் மூலம், NDB பெருநிறுவன துறைக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது. இந்த முன்முயற்சிகள் மூலம், அனைவருக்கும் பசுமையான, நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை NDB தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.

NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05