Feb 11, 2025 - 01:33 PM -
0
இலங்கையின் 97ஆவது தேசிய குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டிகள் 2025 ஜனவரி 23 முதல் 26 ஆம் திகதி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்தின் (BASL) முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது அமைந்திருந்ததுடன், கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் முதன்முறையாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. SLT- MOBITEL, PEOTV மற்றும் PEO SPORTS ஆகியன நிகழ்வின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சி சேவை வழங்குநர்களாக இயங்கியிருந்தன. இந்த சம்பியன்ஷிப் போட்டிகள் True HD தரத்தில் PEO SPORTS 1 channels (HD - CH. 323, SD - CH. 150) காண்பிக்கப்பட்டதுடன், இலங்கையின் குத்துச்சண்டை ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வழியேற்படுத்தியிருந்தது. மேலும், பார்வையாளர்களுக்கு இந்தப் போட்டித் தொடரை நேரலையாக மற்றும் இலவசமாக PEO MOBILE App, ஊடாக கண்டுகளிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு போட்டியும் PEO SPORTS Facebook page மற்றும் YouTube channel இல் நேரலையாக காண்பிக்கப்பட்டன. நேரலை நிகழ்வை உலகளாவிய ரீதியில் குத்துச்சண்டை ஆர்வலர்கள் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கண்டு களித்தனர்.
PEOTV பிரதம அதிகாரி ருச்சிர வீரகோன் கருத்துத் தெரிவிக்கையில், “97ஆவது தேசிய குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பின் பெருமைக்குரிய பங்காளர் எனும் வகையில், சர்வதேச மட்டத்தில் இலங்கையின் குத்துச்சண்டையின் வளர்ச்சிக்கும் ஏற்றுக் கொள்ளலுக்கும் ஆதரவளித்ததையிட்டு SLT-MOBITEL PEOTV பெருமை கொள்கின்றது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
தேசிய நிறுவனங்கள், சர்வதேச விளையாட்டு அமைப்புகள் போன்றவற்றுக்கிடையிலான இணைந்த செயற்பாட்டை வெளிப்படுத்தியதுடன், இலங்கையின் மெய்வல்லுநர்களின் சிறந்த திறமை மற்றும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியிருந்தன. எமது தேசத்தை ஒன்றிணைப்பது மற்றும் ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தையும் இது உணர்த்தியிருந்தது. இவ்வாறான நிகழ்வுகளுக்கு எமது நவீன தொழினுட்பங்களினூடாக வலுவூட்டுவதற்கு PEOTV ஐச் சேர்ந்த நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். அதனூடாக நாடு முழுவதையும் சேர்ந்த ரசிகர்களுக்கு எமது PEO SPORTS கட்டமைப்பினூடாக True HD தர நேரலை அஞ்சலை அனுபவிக்க முடிகின்றது.” என்றார்.
இலங்கையின் குத்துச்சண்டைக்கு முக்கியமான மைல்கல்லாக இந்த சம்பியன்ஷிப் அமைந்திருப்பதுடன், ஆசிய குத்துச் சண்டை சம்மேளனம் (ASBC), சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் (IBA) மற்றும் இலங்கையின் முப்படைகள் (இராணுவம், கடற்படை மற்றும் ஆகாயப்படை) மற்றும் இலங்கை பொலிஸ் போன்றவற்றின் பெறுமதி வாய்ந்த ஆதரவுடன் முன்னெடுக்க முடிந்தது. அவர்களின் திரண்ட பங்களிப்புகளினூடாக இந்த பெருமைக்குரிய நிகழ்வு வெற்றிகரமாகவும் சுமூகமாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டிருந்தது. 125 க்கும் அதிகமான ஆண் மற்றும் பெண் மெய்வல்லுநர்கள் பல்வேறு எடைப் பிரிவுகளில் போட்டியிட்டதுடன், அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மற்றும் வளர்ந்து வரும் நட்சத்திரங்களின் சிறந்த திறமைகளை வெளிக்கொண்டுவருவதாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. இராணுவம், ஆகாயப்படை, கடற்படை, பொலிஸ் ஆகியவற்றின் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பல்வேறு உள்நாட்டு குத்துச்சண்டை கழகங்கள் தமது சிறந்த திறன்கள், ஈடுபாடு மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்தியதுடன், போட்டிகளை மிகவும் விறுவிறுப்பான முறையில் முன்னெடுக்க உதவியிருந்தனர்.
இலங்கை குத்துச்சண்டை சங்கத்தின் (BASL) தலைவர் கலாநிதி. அனுருத்த ஷானக கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் குத்துச் சண்டைக்கு இந்த சம்பியன்ஷிப் மிகவும் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. எமது வீரர்களின் திறமைகளை கொண்டாடுவதுடன், அவர்களுக்கு மேலும் வெற்றிகளை எய்துவதற்கு களத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது. எமது தேசிய திறமையை வெளிப்படுத்துவதற்கு அப்பால், இந்நிகழ்வு 2028 லொஸ் ஏன்ஜல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் தகைமை பெறுவதற்கும், பதக்கங்களை வெல்வதற்கும் முக்கியமானதாக அமைந்திருக்கும். எமது ‘Road to LA28’ இன் அங்கமாகவும் அமைந்துள்ளது.” என்றார்.
இலங்கையை சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளின் மையமாக திகழச் செய்வதில் 97ஆவது தேசிய குத்துச் சண்டை சம்பியன்ஷிப் முக்கிய பங்காற்றியிருந்தது. 2026 பொதுநலவாய விளையாட்டுகள் மற்றும் ஆசிய விளையாட்டுகள் போன்றவற்றுக்கு இலங்கையிலிருந்து திறமைசாலிகளை தயார்ப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது. எதிர்காலத்தில் இலங்கையில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளை முன்னெடுப்பதற்கு அடித்தளத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. நேர்மையில் உயர் நியமங்களை உறுதி செய்யும் வகையில், தென்கொரியா, அயர்லாந்து, இந்தோனேசியா மற்றும் கசகஸ்தான் போன்ற நாடுகளின் நடுநிலையான நடுவர்கள் போட்டியில் உள்வாங்கப்பட்டிருந்தனர். சர்வதேச விதிமுறைகள் பின்பற்றப்படுவதை ஒலிம்பிக் மட்ட அதிகாரிகள் உறுதி செய்திருந்தனர்.
சம்பியன்ஷிப் சாராம்சங்கள்:
* ஆண்கள் பிரிவில் இலங்கை இராணுவம் சம்பியன்ஷிப் வென்றதுடன், பெண்கள் பிரிவில் இலங்கை விமானப் படை சம்பியன்ஷிப் வென்றது.
* இராணுவ குத்துச்சண்டை வீரர்களான பியல் தர்மசேன மற்றும் சந்துனி பிரியதர்ஷினி ஆகியோருக்கு அவர்களின் சிறந்த திறமைகளை கௌரவித்து சிறந்த குத்துச் சண்டை வீரர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
* உமயங்க மிஹிரான் (பொலிஸ் விளையாட்டு கழகம்) ஆண்டின் சிறந்த ஆண் குத்துச் சண்டை வீரர் பட்டத்தையும், ஆர்.ஏ.என். புஷ்பகுமாரி (ஹொரண வித்யரதென விளையாட்டு கழகம்) சிறந்த பெண் குத்துச் சண்டை வீராங்கனை விருதையும் வென்றனர்.
BASL இன் ஒப்பற்ற ஆதரவுடன், 97ஆவது தேசிய குத்துச் சண்டை சம்பியன்ஷிப் ஊடாக இலங்கையின் குத்துச் சண்டை சமூகத்தின் திறன்கள், ஈடுபாடு மற்றும் விடாமுயற்சி போன்றன வெளிப்படுத்தப்பட்டிருந்தன. வீரர்களின் சாதனைகளை கொண்டாடும் வகையில் மாத்திரம் இந்நிகழ்வு அமைந்திராமல், இலங்கையின் எதிர்கால குத்துச் சண்டைக்கான களத்தையும் ஏற்படுத்தியிருந்தது. SLT-MOBITEL இன் நவீன FTTH தொழினுட்பத்தினால் வலுவூட்டப்பட்டதுடன், PEO SPORTS இன் சிறந்த வலையமைப்பினூடாகவும் ஆதரவளிக்கப்பட்டிருந்தது. விளையாட்டு ரசிகர்களின் உள்ளங்களை இந்த சம்பியன்ஷிப் கவர்ந்திருந்ததுடன், இலங்கையின் குத்துச் சண்டை களத்தில் பிரகாசமான எதிர்காலத்துக்கு வழிகோலியிருந்தது.
மேலதிக தகவல்களுக்கு சமூக வலைத்தளங்களில் PEO SPORTS ஐ பின்தொடரவும்.

