Feb 11, 2025 - 02:33 PM -
0
NDB வங்கியானது அதன் அதிநவீன டிஜிட்டல் தளங்களான NEOS இணையத்தள வங்கியியல் மற்றும் NEOS Corporate ஊடாக ` அரசாங்க கொடுப்பனவுகளை செயல்படுத்துவதன் மூலம் நிதி வசதியில் புரட்சியை ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பானது தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் LankaPay ஆகியோரால் வழிநடத்தப்பட்டு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆதரவுடன் இலங்கையின் மாற்றியமைக்கும் டிஜிட்டல் கட்டண தளமான GovPay இன் தொடக்கத்துடன் இணைந்துள்ளது.
NDB வங்கியானது இந்த முயற்சியுடன் கூட்டுசேர்வதன் மூலம், பொதுமக்கள் மற்றும் வர்த்தகங்களுக்கான டிஜிட்டல் அணுகல் மற்றும் நிதியியல் உள்ளடக்கத்தை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. GovPay ஆனது NEOS இல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், பயனர்கள் தங்கள் வீடுகள் அல்லது அலுவலகங்களில் இருந்தே பலவிதமான அரசாங்க சேவைகளுக்கு தடையற்றும் , திறமையான மற்றும் பாதுகாப்பான முறையிலும் பணத்தை செலுத்த முடியும்.
பின்வரும் சேவைகளை தற்போது NEOS வழியாக GovPay மூலம் அணுகலாம்:
- ஆயுர்வேத திணைக்களம்
- யாழ்.பிரதேச செயலகம்
- கேகாலை பிரதேச செயலகம்
- மஹர பிரதேச செயலகம்
- இரத்மலானை பிரதேச செயலகம்
- திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகம்
- கம்பஹா மாநகர சபை
- ரம்புக்கன பிரதேச சபை
- இலங்கை அணுசக்தி சபை
- SLPA - ஒப்புதல் மற்றும் அனுமதி முகாமைத்துவ முறைமை
- இலங்கை நில அளவைத் திணைக்களம்
- இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுக்காற்று ஆணைக்குழு
- மொரட்டுவ பல்கலைக்கழகம்
- தொழில் பயிற்சி அதிகாரசபை
- தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்
- அபேக்ஷா தேசிய புற்றுநோய் வைத்தியசாலை
NEOS உடன் GovPay ஐ ஒருங்கிணைப்பதன் மூலம், NDB வங்கியானது அதன் டிஜிட்டல் வங்கி தீர்வுகளின் தொகுப்பை மேம்படுத்துகிறது, இதன்மூலம் துல்லியம், வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் பொது சேவை கட்டணங்களை எளிதாக்குகிறது. இந்த புத்தாக்க அம்சமானது நாட்டு மக்களுக்கு நிர்வாக சுமைகளை குறைப்பதுடன் மட்டுமல்லாமல் மிகவும் திறமையான மற்றும்பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்திற்கு பங்களிக்கிறது.
இந்த மைல்கல் குறித்து கருத்து தெரிவித்த NDB வங்கியின் உதவி துணைத்தலைவர்- Product Lifecycle Management [PLM]தமிதா சில்வா, “ NDB வங்கியானது இந்த தேசிய முயற்சிக்கு பங்களிப்பதில் பெருமை கொள்கிறது. எங்கள் NEOS இயங்குதளங்களில் GovPay ஐ எளிதாக்குவதன் மூலம், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்புடன் செயல்திறனைஇணைக்கும் நெறிப்படுத்தப்பட்ட தீர்வை வழங்குவதுடன் மட்டுமல்லாமல், நிதியியல் உள்ளடக்கம் மற்றும் கட்டண முறைகளின் டிஜிட்டல் மயமாக்கலுக்கான இலங்கையின் தேசிய பார்வையுடன் நம்மை இணைத்துக் கொள்கிறோம். இந்த ங்குடைமையானது , புத்தாக்கமான மற்றும் அணுகக்கூடிய நிதிச் சேவைகள் மூலம் இலங்கையர்களை வலுவூட்டுவதற்கான எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
NDB வங்கியானது GovPay உடனான அதன் பங்குடைமை மூலம், , நவீன வங்கி வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இணையற்ற தீர்வுகளை வழங்கி, டிஜிட்டல் மாற்றத்தில் தொடர்ந்து வெற்றி பெறுகிறது. இந்த முயற்சியானது வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட, புதுமையான நிதிச் சேவைகளை உருவாக்குவதில் NDB வங்கிவழங்கி வரும் பங்களிப்புக்கு மற்றொரு சான்றாகும்.
NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.

