செய்திகள்
மதுவரித் திணைக்கள ஆணையாளரின் எதிர்பார்ப்பு
Feb 18, 2025 - 01:15 PM -
0
இந்த வருடம் ஜனவரி 7 ஆம் திகதி மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதால், இம்முறை மேலும் விலை உயர்வு இருக்காது என்று மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் யு.எல்.உதய குமார பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், சம்பள அதிகரிப்புடன் எதிர்காலத்தில் அரசாங்க ஊழியர்கள் உந்துதலுடன் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
அனைத்து சட்டவிரோத மதுபான நடவடிக்கைகளை ஒடுக்கவும், அரசாங்கத்திற்கான வருமானத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Comments
0