வணிகம்
அமானா வங்கி மற்றும் Havelock City இணைந்து கண்டியில் வாடிக்கையாளர்கள் மத்தியில் சொகுசான வாழிடம் பற்றிய ஊக்குவிப்பு பிரச்சார செயற்பாட்டை முன்னெடுத்தது

Mar 5, 2025 - 10:23 AM -

0

அமானா வங்கி மற்றும் Havelock City இணைந்து கண்டியில் வாடிக்கையாளர்கள் மத்தியில் சொகுசான வாழிடம் பற்றிய ஊக்குவிப்பு பிரச்சார செயற்பாட்டை முன்னெடுத்தது

அமானா வங்கி, Havelock City உடன் இணைந்து கண்டி பிராந்தியத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான தெளிவுபடுத்தும் நிகழ்வொன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது, Havelock City தமது தொடர்மனைகள் பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்ததுடன், சொகுசான தொடர்மனைகளை கொள்வனவு செய்வதற்கு பிரத்தியேகமான நிதிவசதியளிப்பு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது பற்றிய விளக்கங்களை அமானா வங்கி வழங்கியிருந்தது. Havelock City இன் வடிவமைப்பாளர்களான Mireka Homes (Pvt) Ltd.உடன் அமானா வங்கி ஏற்படுத்திக் கொண்ட பங்காண்மையின் அங்கமாக இந்த வாடிக்கையாளர் நிகழ்வு அமைந்திருந்ததுடன், மக்களுக்கு நட்பான நிதிவசதியளிப்பு சேவைகளுடன், வாடிக்கையாளர்களுக்கு கொழும்பில் உயர்மட்ட சொகுசு சொத்துகளை கொள்வனவு செய்வதற்கு உதவியாக அமைந்திருந்தது. 

நிகழ்வில் பங்கேற்றவர்களில் அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு உப தலைவர் சித்தீக் அக்பர், நுகர்வோர் நிதியியல் தலைமை அதிகாரி ரியாஸ் நூர், பங்காண்மை ஈடுபாட்டு அதிகாரி ஹர்ஷினி மோஹன் மற்றும் Mireka Homes இன் விற்பனை பொது முகாமையாளர் நிரூபா பீரிஸ் ஆகியோர் அடங்கியிருந்தனர். அமானா வங்கியின் நிதிவசதியளிப்பு தெரிவுகள் தொடர்பான பரந்த விளக்கம் நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. அதில், மூன்று தினங்களுள் துரிதமான அனுமதி மற்றும் தனிநபர் வருமான மட்டங்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் அமைந்த நெகிழ்ச்சியான மீளச் செலுத்தும் திட்டங்கள் போன்றன அடங்கியுள்ளன. அதனூடாக மிருதுவான மற்றும் சௌகரியமாக இல்லக் கொள்வனவு செயன்முறை உறுதி செய்யப்படுகின்றது. 

இந்த கைகோர்ப்பு தொடர்பில் அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு உப தலைவர் சித்தீக் அக்பர் கருத்துத் தெரிவிக்கையில், “Havelock City உடனான எமது பங்காண்மையினூடாக, இலங்கையில் உயர் தரம் வாய்ந்த வசிப்பிடப் பகுதிகளுக்கு அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்ய ஆதரவளிப்பதில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற, பொருத்தமான நிதிவசதியளிப்பு தீர்வுகள் போன்றவற்றை பெற்றுக் கொடுப்பதில் முக்கிய அங்கமாக இது அமைந்திருப்பதுடன், பாதுகாப்பான சொத்துகள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு வழிகோலுவதாகவும் அமைந்துள்ளது.” என்றார். 

அமானா வங்கியின் தொடர்மனை நிதிவசதியளிப்பு தீர்வு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு www.amanabank.lk எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும் அல்லது 011 7 756 756 ஊடாக தொடர்பு நிலையத்துடன் தொடர்பு கொள்ளவும். 

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05