Mar 7, 2025 - 04:27 PM -
0
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள போதிலும் கொமர்ஷல் வங்கியின் வாடிக்கையாளர்கள் வங்கியின் ரெமிட்டன்ஸ் அதிர்ஷ்டம் ஊக்குவிப்பு திட்டத்தினால் பெறும் நன்மைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்கனவே ஆரம்பித்து விட்டனர்.
பெப்ரவரி 15 ஆம் திகதி முதல், கொமர்ஷல் வங்கியின் ரெமிட் ப்ளஸ் (ComBank RemitPlus) மூலம் அனுப்பப்படும் பணத்தை பெறுபவர்களின் ஒருவர் தினமும் ரூ. 50,000 ரூபாவை வெல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும் 2025 ஏப்ரல் 15 ஆம் திகதி வரை தொடரவுள்ள இந்த வெற்றி வாய்ப்பின் மூலம் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சீட்டிழுப்பு நடத்தப்பட்டு மொத்தமாக ரூ. 3 மில்லியன் வழங்கப்படவுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பெறுமதி இன்றி,ரெமிட் ப்ளஸ் ஊடாக அனுப்பப்படும் அனைத்துப் பணப் பரிமாற்றங்களும் இந்த சீட்டிழுப்புக்குத் தகுதியானவையாகும். மேலும் ஒவ்வொரு சீட்டிழுப்புக்கு பின்னரும் வெற்றியாளர்களின் பெயர்கள் வங்கியின் சமூக ஊடகத்தளங்களிலும், ரெமிட் ப்ளஸ் செயலியிலும் வெளியிடப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் ரெமிட் ப்ளஸ் என்பது ஒரு அதிநவீன, குறைந்த கட்டணத்துடன் கூடிய, நிகழ்நேர, இணையத்தள பணப்பரிவர்த்தனை வசதியாகும். இது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாடுகளில் இருந்து உடனடி பணப் பரிமாற்றங்களைச் செய்ய உதவுகிறது. 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் முகவர்கள் மற்றும் வர்த்தகப்பங்காளர்களின் வலையமைப்பு மூலம் பணம் அனுப்புபவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். கொம்பேங்க் ரெமிட் பிளஸ் ஊடாக பணம் பெறுபவர்களின் கொமர்ஷல் வங்கிக் கணக்குகளில் நாளின் எந்த நேரத்திலும், வருடத்தின் எந்த நாளிலும் உடனடியாக பணம் வைப்பிலிடப்படும்.
கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பணம் அனுப்புதல் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் சிரமமின்றிப் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்ட கொம்பேங்க் ரெமிட் பிளஸ் செயலியை கொமர்ஷல் வங்கி ரெமிட் ப்ளஸ் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. RemitPlus செயலியை ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் ப்ளே ஸ்டோர் வழியாக எவரும் பதிவிறக்கம் செய்து, இணைவு கட்டணம் அல்லது வருடாந்த கட்டணம் இல்லாமல் பயன்படுத்தலாம்.
தொடர்ச்சியாக ஒழுங்காக வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணத்தை பெறுபவர்கள், கொமர்ஷல் வங்கியில் ரெமிட்டன்ஸ் கணக்கைத் தொடங்கவும், ரெமிட்டன்ஸ் அட்டையை இலவசமாகப் பெறவும் தகுதியுடையவர்கள் ஆவர். ரெமிட்டன்ஸ் கணக்குகளில் வைப்பிலிடப்படும் பணத்தினை ரெமிட்டன்ஸ் அட்டை மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதலாவது இலங்கை வங்கியாகும். மற்றும் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது. அத்துடன் இலங்கையின் முதலாவது 100மூ கார்பன் நடுநிலை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச தடத்தைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 நிலையங்கள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான Tier I வங்கி ஆகியவற்றை கொண்டு திகழ்கிறது.வங்கியின் முழு உரித்தான துணை நிறுவனமாக CBC ஃபினான்ஸ் லிமிடெட் திகழ்கிறது. வங்கியானது அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பரந்த அளவிலான நிதிச் சேவைகளையும் வழங்குகிறது.

