வணிகம்
SLT-MOBITEL மற்றும் இலங்கை புகையிரத திணைக்களம் கைகோர்த்து ஓய்வூதியம் பெறுவோருக்கான புகையிரத Warrant செயன்முறையை டிஜிட்டல் மயமப்படுத்த நடவடிக்கை

Mar 11, 2025 - 09:01 AM -

0

 SLT-MOBITEL மற்றும் இலங்கை புகையிரத திணைக்களம் கைகோர்த்து ஓய்வூதியம் பெறுவோருக்கான புகையிரத Warrant செயன்முறையை டிஜிட்டல் மயமப்படுத்த நடவடிக்கை

அனைவருக்கும் டிஜிட்டல் தீர்வுகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், SLT-MOBITEL, இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் ஓய்வூதிய திணைக்களம் ஆகியன இணைந்து, ஓய்வூதியம் பெறுவோருக்கு தமது புகையிரத பயணங்களை இலகுவாக பதிவு செய்து கொள்ளக்கூடிய வகையில், SLT-MOBITEL இன் நவீன வசதிகள் படைத்த mTicketing கட்டமைப்பில் ஓய்வூதியம் பெறுவோருக்கான புகையிரத அனுமதிப்பத்திரங்கள் (warrant) செயன்முறையை ஒன்றிணைத்துள்ளன. 

ஓய்வூதியம் பெறுவோருக்கான புகையிரத அனுமதிப்பத்திரங்கள் (warrant) டிஜிட்டல் மயப்படுத்தி அறிமுகம் செய்யும் நிகழ்வு அண்மையில் கொழும்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் அரச நிறுவனங்கள், இலங்கை புகையிரத திணைக்களம், ஓய்வூதிய திணைக்களம் மற்றும் SLT- MOBITEL ஆகியவற்றின் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

முன்னர், SLT-MOBITEL இன் சகல வசதிகளையும் கொண்ட டிஜிட்டல் கட்டமைப்பினூடாக பொது மற்றும் அரச சேவையாளர்களுக்கு டிக்கட்களை ஒன்லைனில் முற்பதிவு செய்து கொள்ளும் வகையில் eTickets மற்றும் eWarrant வசதி வழங்கப்பட்டது. இலங்கையில் புகையிரத சேவைகளை நவீன மயப்படுத்துவதில் முக்கிய முன்னேற்றமாக, தற்போது ஓய்வூதியம் பெறுவோருக்கும் தமது இல்லங்களில் சௌகரியமாக இருந்தவாறே டிஜிட்டல் கட்டமைப்பினூடாக பயணச் சீட்டுகளை சுலபமாக முற்பதிவு செய்து கொள்ளலாம். 

தேசிய தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தீர்வுகள் வழங்குனர் எனும் வகையில் SLT-MOBITEL, தேசத்தின் ஓய்வூதியம் பெறுவோருக்காக டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதையிட்டு பெருமை கொள்கின்றது. டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகளுக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இந்தத் திட்டம் வெளிப்படுத்துவதுடன், ஓய்வூதியம் பெறுவோர், நாட்டுக்காக பல வருடங்களாக ஆற்றியுள்ள சேவைக்கான நன்றியை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. 

சாதாரண பயணிகளுக்காக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட SLT-MOBITEL ஒன்லைன் முற்பதிவு கட்டமைப்பு வெற்றிகரமாக அமைந்திருந்ததை தொடர்ந்து இந்த அறிமுகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவோருக்கான புகையிரத அனுமதிப்பத்திரங்களை (warrant) ஒன்லைன் கட்டமைப்பினுள் உள்ளடக்கியுள்ளமையினூடாக, சகல பிரிவினருக்கும் புகையிரத பயணச்சீட்டு தற்போது முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இலங்கையின் டிஜிட்டல் மாற்றியமைப்பு பயணத்துக்கு ஆதரவளிக்கும் SLT-MOBITEL இன் பரந்த அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாகவும் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. குறிப்பாக, அரச உரிமையாண்மையில் இயங்கும் நிறுவனங்களுக்கு சிறந்த இணைப்புத்திறன் தீர்வுகளை வழங்கி டிஜிட்டல் மயப்படுத்துவதை குறிப்பிடலாம். டிஜிட்டல் இலங்கையை உருவாக்கும் தேசிய நோக்கத்துக்கமைய இந்த நடவடிக்கை அமைந்துள்ளதுடன், சகல குடிமக்களுக்கும் அத்தியாவசிய சேவைகளை இலகுவாகவும் சௌகரியமாகவும் அணுகக்கூடியதாக செய்வதாக உள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05