Apr 23, 2025 - 05:16 PM -
0
துருக்கி இஸ்தான்புல் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில் மக்கள் பொது இடங்களில் தஞ்சமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் இஸ்தான்புல் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

