Header Logo

இந்தியா
14 வயது சிறுவனை தலைகீழாகத் தொங்கவிட்டு மின்சாரம் பாய்ச்சி தாக்கிய கொடூரம்!

Jun 6, 2025 - 07:03 PM -

0

14 வயது சிறுவனை தலைகீழாகத் தொங்கவிட்டு மின்சாரம் பாய்ச்சி தாக்கிய கொடூரம்!

கைப்பேசியை திருடியதாகக் கூறி 14 வயது சிறுவனை தலைகீழாக தொங்கவிட்டு மின்சாரம் பாய்ச்சி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின், மேற்கு வங்க மாநிலம், மகேஷ்தலா பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுவன். இவர் கைப்பேசியை திருடியதாகக் கூறி அவரை தலைகீழாக தொங்கவிட்டு மின்சாரம் பாய்ச்சி தொழிற்சாலை உரிமையாளரான ஷாஹென்ஷா என்பவர் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு அளித்தனர். அதில் ஷாஹென்ஷா குறைவான ஊதியம் கொடுத்து சிறார்களை வேலைக்கு அமர்த்துவதாக சிறுவனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவன் இருப்பிடம் மற்றும் அவரது தற்போதைய நிலை என்னவென்று தெரியாமல் குடும்பத்தினர் சிக்கித் தவிக்கின்றனர். 

இதற்கிடையில், தலைமறைவான ஷாஹென்ஷா மும்பையில் வைத்து பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷாஹென்ஷாவுடன் நெருங்கிய தொடர்புடைய முஸ்தபா கமால் மற்றும் தௌஹித் ஆலம் என இருவரையும் பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சிறுவனைத் தேடும் பணியில் பொலிசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title