Header Logo

இந்தியா
வேலைக்கு சென்றபோது தகாத உறவு

Jun 8, 2025 - 07:35 AM -

0

வேலைக்கு சென்றபோது தகாத உறவு

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரு அனேகல் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 28). இவர் 26 வயது மனைவி மற்றும் கைக்குழந்தையும் ஹீலலிகே என்ற கிராமத்தில் வீடு வாடைக்கு எடுத்து வாழ்ந்து வந்தார்.

கடந்த 3 ஆம் திகதி, சங்கர் தனது மனைவியிடம் நான் வேலைக்குச் செல்கிறேன். 4 ஆம் திகதி காலைதான் திரும்பி வருவேன் எனத் தெரிவித்து விட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.

வேலை விரைவாக முடிய, இரவே வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்தபோது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய மனைவி மற்றொரு நபருடன் இருந்துள்ளார். இதைப் பார்த்த பயங்கர கோபம் அடைந்துள்ளார். மனைவியுடன் இது தொடர்பாக சண்டையிட்டுள்ளார். மனைவியும் இவருடன் சண்டையிட்டுள்ளார்.

பின்னர் வீட்டை விட்டு வெளியேறுவதாக மனைவி கூறியுள்ளார். வீட்டைவிட்டு வெளியேறிய மனைவி, அடிக்கடி வீட்டிற்கு வந்து சங்கருடன் தகராறு செய்துள்ளார். இதுபோன்றுதான் நேற்றும் சங்கர் வீட்டில் இருந்தபோது, அவரது மனைவி வந்து தகராறு செய்துள்ளார்.

இதனால் சங்கருக்கு கடுங்கோபம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்குப் பிறகு மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். அத்துடன் அவரது கோபம் தீரவில்லை. மனைவியின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல், மனைவியின் தலையை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று சரணடைந்துள்ளார். தனது மனைவியை தலை துண்டித்து கொலை செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். பொலிஸார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title